மனைவியுடன் ஒரே படுக்கையில் நெருங்கிய நண்பன்! நேரில் பார்த்த கணவன் அரங்கேற்றிய கொடூரம் சம்பவம்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெண்ணின் கணவரை தனியார் பேருந்து ஓட்டுநர் கொலை செய்திருக்கும் சம்பவமானது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் குள்ளஞ்சாவடி என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே கருமாச்சிபாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜமுருகன். இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பல வருடங்களுக்கு முன்னர் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

கருமாச்சிபாளையத்தில் கோவிந்தராஜ் என்ற தனியார் பேருந்து ஓட்டுநர் வசித்து வருகிறார். இவருக்கும்  ராஜமுருகனுக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. இதனால் கோவிந்தராஜ் அடிக்கடி ராஜமுருகனின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும் ரேவதிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல முறை உல்லாசமாக இருந்துள்ளனர். நாளடைவில் ராஜமுருகனுக்கு இது தெரியவந்தது. பின்னர் இருவரையும் ராஜமுருகன் கண்டித்துள்ளார்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து தகாத முறையில் உறவாடிக்கொண்டு இருந்தனர். கோவிந்தராஜ் ரேவதியுடன் சென்னைக்கு செல்ல திட்டமிட்டார். இதனையறிந்து கொண்ட ராஜமுருகன், தன் தம்பி ராஜசிம்மனுடன் இருவரையும் தேடி சென்றனர். ஒருவழியாக கோவிந்தராஜையும் ரேவதியையும் கண்டுபிடித்த இவர்கள் ஊருக்கு அழைத்து வந்தனர். ரேவதியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு கோவிந்தராஜனை ராஜமுருகனும் அவருடைய தம்பியும் கொலை செய்துள்ளனர். 

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கோவிந்தராஜையும் ரேவதியும் காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்கள் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். 6-ஆம் தேதியன்று முதுநகர் மணக்குப்பம் என்னும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். காவல்துறையினர் அடையாளத்தை கண்டுபிடிக்கும் போதே, ராஜமுருகனும் அவருடைய தம்பி ராஜசிம்மனும் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவிந்தராஜ் தன் மனைவியுடன் சென்னைக்கு இடம்பெயர முயற்சித்ததாலே அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.இந்த சம்பவமானது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.