கல்யாணம் மட்டும் வேண்டாம்..! மத்ததது எல்லாத்துக்கும் ஓகே..! திலகவதி சொன்ன அந்த விஷயம்..! டென்சனான பத்மநாபன் செய்த சம்பவம்!

தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது கோயம்புத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேரு நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சக்திவேல் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவியின் பெயர் திலகவதி. திலகவதி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இதனிடையே 4 வருடங்களுக்கு முன்னர் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அதே பகுதியில் பத்மநாபன் என்பவர் கறிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருடைய மனைவி பிரிந்து சென்றதால் தனிமையில் வசித்து வந்துள்ளார். அப்போது இவருக்கும் திலகவதிக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமான நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டுள்ளனர்.

பத்மநாபனுக்கு திலகவதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால் திலகவதி சில காரணங்களும் கூறிவிட்டு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பத்மநாபன் திலகவதிக்கு வேறு யாருடனோ தொடர்பிருப்பதால் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்று எண்ணியுள்ளார்.  

திலகவதியை அடிக்கடி சந்திக்கும் இடத்திற்கு பத்மநாதன் வர கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆத்திரமடைந்த பத்மநாபன் சுத்தியலால் திலகவதியை தலையில் அடித்து கொலை செய்துள்ளார். திலகவதி கொலை செய்த பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

திலகவதி காணவில்லை என்று அவருடைய பெற்றோர் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட  காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது அப்பகுதியிலுள்ள தகர கொட்டகைக்குள் ஒரு பெண்ணின் பிணம் இருப்பதாக தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்தது திலகவதி என்பது தெரியவந்துள்ளது. அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.