2 குழந்தைகளுக்கு தாய், 29 வயதான பெண்ணுடன் தகாத உறவு! 21 வயது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

மதுபோதையில் அடிக்கடி வந்து தகராறு செய்து கொண்டிருந்த கள்ளக்காதலனை பெண்னொருவர் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அவனது மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் டி.கல்லுப்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. டி.கல்லுப்பட்டியின் வடக்கு தெருவில் கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் வெயில்முத்து. வெயில்முத்துவின் வயது 21. அதே பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

காளீஸ்வரி என்ற 29 வயது மதிக்கத்தக்க பெண் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 மற்றும் 12 வயதுகளில் பெண் குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் 2014-ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். 

ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் காளீஸ்வரிக்கும் வெயில்முத்துவிற்கும் நெருக்கம் ஏற்பட்டது. காலப்போக்கில் நெருக்கமானது கள்ளக்காதலாக மாறியது. வெயில்முத்து தன் வீட்டிற்கு செல்லாமல் காளீஸ்வரி வீட்டிலேயே தங்கி வந்தார். வெயில்முத்துவிற்கு மதுப்பழக்கம் உள்ளது. சமீபமாக அடிக்கடி மது அருந்திவிட்டு காளீஸ்வரியை அடித்து துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதேபோன்று 17-ஆம் தேதியன்று வெயில்முத்து காளீஸ்வரியை அடித்து துன்புறுத்தியுள்ளார். வலியைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் காளீஸ்வரி அவரை கீழே தள்ளிவிட்டார். கூர்மையான ஆயுதங்களின் மேல் விழுந்ததால் வெயில்முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரி வீட்டு முன் பகுதியில் குழியை தோண்டி வெயில்முத்துவை புதைத்துள்ளார். ஆனால் காலையில் துர்நாற்றம் வீச தொடங்கியதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டனர். சூழ்நிலை சரி இல்லாததை உணர்ந்த காளீஸ்வரி கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

வெயில்முத்துவின் உடலை கல்லுப்பட்டி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். மேலும் இந்த கொலையை காளீஸ்வரி தனியாக செய்து வைக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

கல்லுப்பட்டி காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.