என் உடம்பு..! என் ஆசை..! யாருக்கு வேணும்னாலும்..! கள்ளக்காதலி சொன்ன ஒற்றை வார்த்தை..! பிறகு அரங்கேறிய நினைத்து பார்க்க முடியாத பயங்கரம்!

கள்ளக்காதலர் தன்னுடைய கள்ளக்காதலியை எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் மேட்டூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட நங்கவள்ளிக்கு அருகேயுள்ள மசக்காளிப்பட்டி எனும் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய வயது 39. இவர் மேட்டூரில் இயங்கிவரும் ஒரு மாட்டு இறைச்சி கடையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இவருக்கும் கொளத்தூர் அடுத்துள்ள அய்யம்புதூர் பகுதியை சேர்ந்த பார்வதி என்ற 35 வயது பெண்ணுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பார்வதி கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமையல் வேலைக்காக அடிக்கடி பார்வதியின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. எப்போதும் போல சென்று வந்த இவர் பார்வதி வேறு சிலருடனும் நெருக்கமாக இருப்பதை கண்டறிந்துள்ளார். 

இதனால் சம்பவத்தன்று இருவருக்குமிடையே தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார் பார்வதியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். வெப்பம் தாங்காமல் அலறிக்கொண்டு வெளியே வந்த பார்வதியை அக்கம்பக்கத்தினர் மீட்டெடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிகிச்சை பெற்று வந்த பார்வதி உடல் நலம் குன்றி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது மேட்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.