பன்றி என்று நினைத்து சுட்டதில் இளைஞர் உயிரிழந்திருப்பது தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோளக்காட்டுக்குள் உல்லாசம்! பன்றி என நினைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட காதலன்! அலறித்துடித்த காதலி! பிறகு தெரிய வந்த அதிர்ச்சி உண்மை!
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள சிக்கமாரண்டஅள்ளி எனும் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருந்தன. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ராதா என்ற பெண்ணுடன் ஆறுமுகத்திற்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
அப்பகுதியிலுள்ள சோளகாட்டுக்குள் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நெடுநேரமாகியும் பொழுது சாய்ந்த பிறகும் அங்கேயே இருவரும் தனிமையை கழித்து கொண்டிருந்தனர். பல நாட்களாக தங்களது சோள காட்டு பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வந்ததால் சின்னசாமி மற்றும் சண்முகம் ஆகியோர் கைகளில் வேட்டை துப்பாக்கியுடன் அங்கு வந்துள்ளனர்.
சோளக்காட்டுக்குள் அசைவுகள் இருப்பதை கண்ட இருவரும் இவற்றை துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி குண்டு ஆறுமுகத்தின் உடலை துளைத்துக்கொண்டு ராதாவின் உடலிலும் சென்றது.
சத்தம் கேட்டவுடன் சின்னசாமியும் சண்முகமும் பதறி அடித்துக்கொண்டு சென்றனர். ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயமடைந்த ராதாவை இருவரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டது போன்று தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய உடலை ரயில் தண்டவாளத்தில் வைத்துள்ளனர். மேலும் அவருடைய இரு சக்கர வாகனத்தையும் தண்டவாளத்தில் போட்டுள்ளனர்.
அதிவேகத்தில் வந்த ரயில் அவரின் உடலை சிதைத்து கொண்டு சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆறுமுகத்தின் உறவினருக்கு தகவல் தெரிவித்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போது மேற் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.
ஏற்கனவே இரு குடும்பத்தாருக்கும் நிலம் சார்ந்த பிரச்சினைகள் இருந்து வந்ததால் திட்டமிட்டபடி ஆறுமுகம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவருடைய உறவினர்கள் கூறி வருகின்றனர். இந்த சம்பவமானது தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.