உல்லாசத்துக்கு தொடர் இடையூறு! கள்ளக்காதல் ஜோடி விபரீத முடிவு!

கோவை மாவட்டத்தில் கள்ளக்காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்துக்கொள்ள ஓடும் ரயிலின் முன் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கேபி.ஆர் லேஅவுட் என்ற இடத்திலுள்ள மெக்கானிக்  வேலை செய்து வருபவர் மதன்குமார். இவர் பணிபுரியும் ஒர்க்ஷாப்பின் எதிர் வீட்டில் கீர்த்தனா என்பவர் வசித்து வந்தார். அவருடன் மதனுக்கு சில நாட்களிலேயே நெருங்கி பழக தொடங்கினார். கீர்த்தனாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

நெருக்கம் அதிகரிக்க, இவர்கள் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் கீர்த்தனாவின் குடும்பத்தாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் இவர்களால் உல்லாசமாக இருக்க முடியவில்லை. மேலும் கீர்த்தனாவை வண்மையாக  கணவர் உள்ளிடடோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரம் முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.  

அவர்கள் திருடிச்சென்ற பணம் தீர்ந்தவுடன் மீண்டும் சிங்காநல்லூர் வந்தனர். வீட்டிற்கு சென்றால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று எண்ணி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கு சென்று அவ்வழியாக வந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொள்ள முயன்றுள்ளனர்.

இதில் மதன் குமார் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். கீர்த்தான இரயில் மோதிய வேகத்தில் தூக்கியெறியப்பட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த அவரை பொத்தனூர் ரயில்வே போலிசார் மீட்டெடுத்து கோவை அரசு மருத்துவமனையில், கீர்த்தனா தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.

இறந்த மதன்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து பொத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.