ஒரே நேரத்தில் அக்காள், தங்கைக்கு தகாத உறவு! 600 அடி பள்ளத்தில் ஆண் சடலம்! கொடைக்கானலை உலுக்கிய பகீர் சம்பவம்!

கள்ளக்காதலை கண்டித்த நபரை 600 அடி உயரத்தில் 5 பேர் கொலை செய்துள்ள சம்பவம்  கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்தில் சின்னமனூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகே ஓடைப்பாடி எனும் இடத்தை சேர்ந்தவர் திருப்பதி. திருப்பதியின் வயது 48. இவருடைய மனைவியின் பெயர் முருகேஸ்வரி. முருகேஸ்வரியின் வயது 38. 5 வருடங்களுக்கு முன்னர் கொடைக்கானலுக்கு விவசாயம் செய்வதற்காக திருப்பதி வந்துள்ளார். 

கூம்பூர் வயலில் தாஸ் என்பவரது மனைவி ஜான்சிராணி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய வீட்டில் சங்கீதா திருப்பதி தினமும் வயலுக்கு சென்று வருவார். அப்போது இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனிடையே தொடர்ந்து 3 மாதங்களாக தன்னுடன் கணவர் தொடர்பில் இல்லாததால் முருகேஸ்வரி சந்தேகம் அடைந்துள்ளார். உடனடியாக அவர் கொடைக்கானலுக்கு வந்து தேடி பார்த்துள்ளார். தன் கணவன் கிடைக்காததால் கொடைக்கானல் பகுதி காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற காவல்துறையினர் விசாரித்ததில் திருப்பதி இறந்து போன சம்பவம் தெரியவந்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் கொடைக்கானலில் கார்த்தி விபத்தில் மணிகண்டன் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. காவல்துறையினர் தலைமறைவாக இருந்த மணிகண்டனை தேடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. 

அதாவது மணிகண்டன் ஜான்சிராணியின் தங்கையுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். தங்கையான சாந்தி மணிகண்டனுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை திருப்பதி பலமுறை கண்டித்துள்ளார். இதனால் மணிகண்டன் தன்னுடைய நண்பர்கள் மற்றும் சகோதரிகளின் துணையுடன் திருப்பதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதியன்று திருப்பதியை ஜான்சிராணி வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது 5 பேரும் இணைந்து திருப்பதியில் பலமாக தாக்கினார். இந்த தாக்குதலில் திருப்பதி இறந்து போனார். உடனடியாக அவருடைய உடலை வேனில் ஏற்றி அடுக்கம் கிராமத்தில் 600 அடி உயரத்திலிருந்து கீழே தள்ளியுள்ளனர். 

கார் எரிப்பு வழக்கிற்காக காவல்துறையினர் சென்றபோது மணிகண்டன் இந்த சம்பவத்தை பற்றி கூறி சிக்கிக்கொண்டுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.