45 வயது பெண்ணுக்கு 35வயது இளைஞருடன் தகாத உறவு! கண்டுபிடித்த குடும்பத்தார்! பிறகு நேர்ந்த விபரீதம்!

கள்ளக்காதல் ஜோடி பாலத்தின் அடியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மதுக்கூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மருங்காபுரி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள ஊத்துக்குளியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. முத்துலட்சுமியின் வயது 45. இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். இவருடைய பக்கத்து வீட்டு குமார் என்பவர் வசித்து வந்தார். குமாரின் வயது 35. குமாருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பதால் நெருக்கமாக பழகி வந்தனர்.

நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிந்து உல்லாசம் அனுபவித்து உள்ளனர். 10 நாட்களுக்கு முன்னர் மதுக்கூரில் விவசாய வேலை செய்வதற்காக இருவரும் வந்தனர்.

நேற்று திடீரென்று இருவரும் மதுக்கூரில் உள்ள அண்டமி பாலத்தின் கீழ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர் பாலத்தின் கீழ் 2 சடலங்களை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து மதுக்கூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தங்கள் கள்ளக்காதல் வீட்டாருக்கு தெரிந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற வியூகத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது மதுக்கூர் பரபரப்பை ஏற்படுத்தியது.