காதலிக்கு கல்யாணம் ஆன பிறகும் காதலன் செய்த தகாத செயல்! விரக்தியில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!

முசாபர்நகரில் ஹிஜாப்பூர் என்ற பகுதியில் திருமணமாகிய 20 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண்ணின் பெயர் நக்மா என்பதாகும். இவருக்கும் இவரதுகாசிப் என்பவருக்கும் திருமணமாகி எட்டு மாதங்களாயின.


இந்தப் பெண்னை ஒருவன் ஒரு தலையாக காதல் செய்தான். கல்யாணத்திற்கு பிறகும் அவளை விடவில்லை. பல தொந்தரவுகளை செய்து கொண்டிருந்தான். நக்மா, அந்த நபரின் தொல்லைகளை தாங்க இயலாமல், கடந்த சனிக்கிழமை அன்று தன் பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 

அவரின் தந்தை தன் மகளின் தற்கொலை பற்றி காவல் நிலையத்தில் SP சத்பால் அத்னிலிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, சில வருடங்களாக ஷாவெஸ் என்பவன் தன் மகளை ஒரு தலையாக காதல் செய்து வந்ததாகவும், அவளின் திருமணத்திற்கு பிறகும் அவன் அவளை காதலித்ததாகவும் கூறினார்.

மேலும் கணவனை விவாகரத்து செய்ய தன் மகளை வற்புறுத்தி வந்தான். அவ்வாறு செய்யவில்லை என்றால் பெரும் அசம்பாவிதங்களை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினான். இதற்கு பயந்தே தன் மகள் தற்கொலை செய்ததாக நக்மாவின் தந்தை அகமத் கூறியுள்ளார்.இதனால் அப்பகுதி சோக கடலில் மூழ்கியுள்ளது.

இதே போன்று மற்றொரு சம்பவத்தில் தன்னுடைய மேலாளரின் தொல்லைகளை சமாளிக்க முடியாமல் "ஹரிதர்ஷன்" என்பவர் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவருடைய குடும்பத்தினர் விரிவான புகாரை அளிக்க உள்ளதாக தகவல்கள்