வானில் வந்த கருப்பு நிற பறக்கும் தட்டு? வேற்றுகிரகவாசிகள் வந்துவிட்டார்களா? வைரல் வீடியோ உள்ளே!

உலகின் பல நாடுகளில் வானில் கருப்பு வளையங்கள் தோன்றிய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வானில் அவ்வப்போது வித்தியாசமான நிகழ்வுகள் ஏற்படுவது வழக்கமாகும். அகற்று பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்ப்பர். வானத்தில் இரவு நேரங்களில் புள்ளிகள் போன்று சில முறை தோன்றியுள்ளன. சிலமுறை மக்களே இது போன்ற வதந்திகளை பரப்பியதும் உண்டு. இதனிடையே இதன் பின்னுள்ள அறிவியல் காரணங்களை அறிவதற்கு விஞ்ஞானிகள் கடுமையாக முயற்சிப்பர்.

தற்போது பாகிஸ்தான் நாட்டில் லாகூர் நகரிலும், இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரிலும் வானத்தில் திடீரென்று காலைநேரத்தில் கருப்பு நிற வளையங்கள் தோன்றியுள்ளன. இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் பேரதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பகிரப்பட்டு வந்தது.

இந்த கருப்பு வளையங்கள் காலை முதல் மாலை வரை வானத்திலே இருந்துள்ளன என்றும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரவும் செய்துள்ளன என்றும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.  இந்த வளையங்கள் ஏலியனால் ஏற்பட்டதா என்றும் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் புகை மண்டலத்தினால் ஏற்படக்கூடும் என்றும், புகை வெடிப்பு குண்டுவெடிப்பு முதலிய சம்பவங்களிலும் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர். இருந்தாலும் இந்த நிகழ்வு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர்.

இந்த சம்பவமானது உலகின் பல நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.