உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் 52 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
உ.பி! பாஜக கோட்டை என நிரூபித்த மோடி! அதிர்ச்சியில் மாயா, அகிலேஷ்!
7 கட்டமாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.இந்தியாவிலே அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலமான உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் பாஜக 52 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் வாதி கட்சி 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜக வினர் உற்சாகத்தில் உள்ளனர்.
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.