ஏடிஎம் எந்திரத்தில் இருந்து குடம் குடமாக கொட்டிய பணம்! மக்கள் இன்ப அதிர்ச்சி!

லண்டன்: பிட்காயின் ஏடிஎம்மில் இருந்து ஏராளமான பண நோட்டுகள் சிதறியடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிட்காயின் இன்றைக்கு வெளிநாடுகளில் முக்கிய பொருளாதார தேவையாக உள்ளது. இதன்படி, லண்டனில் உள்ள பாண்ட் ஸ்ட்ரீட் டியூப் ஸ்டேசனில், உள்ள பிட்காயின் ஏடிஎம் ஒன்றில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிறைய எடுத்திருக்கிறார். ஆனால், திடீரென கோளாறு ஏற்பட்ட அந்த இயந்திரம், அதி வேகத்தில் யூரோ கரன்சிகளை விசிறியடித்தது.

அதைக் கையில் எடுக்கக்கூட வாடிக்கையாளருக்கு அவகாசம் கிடைக்கவில்லை. அந்த கரன்சி நோட்டுகள் காற்றில் அங்கும் இங்கும் பரவியதால், டியூப் ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்பட்டது. நாற்பக்கமும் கரன்சி நோட்டுகள் மழை போல கொட்டியதால், பணம் எடுக்க வந்த நபர் செய்வதறியாது அப்படியே திகைத்து நின்றுவிட்டார்.

இதன்போது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர அது தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட ஏடிஎம் இயந்திரத்தில் இருப்பதைவிட, அதிகளவு பணத்தை அந்த நபர் பரிவர்த்தனை செய்ய முயன்றுள்ளார். இதனால் குழப்பமடைந்த பிட்காயின் ஏடிஎம் இயந்திரம் பணத்தை தாறு மாறாக வீசியெறிந்ததாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.