காட்டெருமையுடன் ஷெல்பி எடுத்த சிறுமி - அடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் வனவிலங்குகளை காண சென்றபோது 9 வயது சிறுமியை அங்கிருந்த காட்டெருமை ஒன்று முட்டி தூக்கி வீசியுள்ளது.இச்சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவிவருகிறது.


அமெரிக்காவின் ஃபுளோரிடா பகுதியில் உள்ள எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் அதிக அளவில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளும் வனவிலங்குகளும் இந்த பூங்காவில் அதிகம் உள்ள நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று பூங்காவில் சற்று கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

இந்நிலையில் வனவிலங்குகள் உள்ள பகுதிகளில் அங்கிருந்த வனவிலங்குகளை மக்கள் பார்த்து வந்துள்ளனர். அப்போது அங்கு திடீரென ஒரு காட்டெருமை வந்துள்ளது அதை பலரும் தங்களது கேமராவில் போட்டோ எடுத்து உள்ளனர். இந்நிலையில் திடீரென காட்டெருமை அங்கிருந்து கூட்டத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது இந்நிலையில் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடும்போது காண்டாமிருகம் அவர்களை விரட்டத் துவங்கியது.

இந்நிலையில் 9 வயது சிறுமி ஒருவர் அங்கிருந்த காட்டெருமை பார்த்த வண்ணம் நின்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காட்டெருமை அந்த சிறுமியை முட்டியது. 

இந்நிலையில் முட்டி தூக்கி வீசப்பட்ட குழந்தைக்கு பலத்த அடி விழுந்தது.  இந்நிலையில் காயமடைந்த குழந்தையை உடனே மருத்துவ குழுவினர் வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே காட்டெருமை அங்குள்ள ஊழியர்களால் திரும்பவும் காட்டிற்குள் முடுக்கிவிடப்பட்டது.

இதையடுத்து மருத்துவ குழுவினர் வந்த பிறகு குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு திரும்பவும் குழந்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்நிலையில் இந்த அதிர்ச்சி சம்பவம்  பூங்காவில் உள்ள அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.