பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கதவை திறந்த நிலையிலேயே பாத்ரூம் போன சாண்டி! பார்த்து முகத்தை சுளித்த ஷெரின்! புதுப் பஞ்சாயத்து!
பரபரப்பின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது . இந்நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சாண்டி செய்த ஒரு காரியம் போட்டியாளர்களை மிகவும் முகம் சுளிக்க வைத்தது . அதாவது நேற்று நள்ளிரவில் சுமார் ஒரு மணி இருக்கும் போது பிக்பாஸ் அனைத்து போட்டியாளர்களும் லைட் ஆன் செய்து எழுப்பி விட்டார். பின்னர் டிக்கெட் ஃபினாலே டாஸ்க் ஒன்றை போட்டியாளர்கள் இடம் கூறினார்.
அதாவது போட்டியாளர்கள் அனைவரிடமும் ஒவ்வொரு தங்க முட்டை அளிக்கப்பட்டது . அந்த தங்க முட்டையை ஒவ்வொருவரும் உறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . தங்க முட்டையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் ஒவ்வொரு போட்டியாளரும் இயற்கை உபாதைகளை கூட தாங்கிக் கொண்டு இருந்தனர் . அந்த நேரத்தில் நடன இயக்குனர் சாண்டி இயற்கை உபாதையால் அவதிப்பட்டதால் பாத்ரூம் கதவை திறந்து வைத்தபடியே சிறுநீர் கழித்தார் .
இதனை பார்த்த சேரன் , ஷெரின் ஆகியோர் முகம் சுளித்தனர். அவர்கள் மட்டுமில்லாமல் இதனை பார்த்த ரசிகர்களும் முகம் சுளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் மற்ற போட்டியாளர்களின் தங்க முட்டையை யும் உடைக்கவேண்டும் . உடைக்கும் போது முட்டையின் சொந்தக்காரர் பார்த்து விடாமல் இருக்க வேண்டும்.
ஒருவேளை முட்டைக்கு சொந்தக்காரர் அந்த முட்டையை பிறர் உடைக்கும்போது பார்த்துவிட்டால் முட்டையை உடைத்த போட்டியாளர் அவுட்டாகி விடுவார் . இதுதான் போட்டியின் விதிமுறை . இந்த போட்டியில் பங்கேற்ற சாண்டி , ஷெரின் முட்டையை உடைக்க பிளான் செய்தார் .
முட்டையை உடைத்த போது அதனை ஷெரின் பார்த்து விட்டார் இதனால் சாண்டி அந்த போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார்.