ஆடை அமலா போல் நடிக்க ஆசைப்படும் இன்னொரு நடிகை! வாய்ப்பு கொடுக்க யார் இருக்கா? ஏக்கத்தில் ரசிகர்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. இவருக்கு "ஆடை" போன்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிக ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.


நடிகை பிந்து மாதவி வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா , கழுகு 1, கழுகு 2  திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.  இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசுகையில் பலவிதமான கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது நான் என்னதான் தெலுங்கு பெண்ணாக இருந்தாலும் தமிழ்நாடும் என்னுடைய இன்னொரு தாய் வீடு தான் என்று கூறியுள்ளார் . 

நான் ஹைதராபாதில்   இருப்பதை விட சென்னையில் தான் அதிகமாக இருந்து இருக்கிறேன். மேலும்  நடிகை பிந்து மாதவி தமிழ் சினிமாவைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசினார் . அதில் தற்போது தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி பல விதமான நல்ல திரைப்படங்கள் வெளியாகின்றன.

இதனை வைத்துப் பார்க்கும் போது தமிழ் ஹீரோயின்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்பது நன்றாக புரிகிறது .  இது தமிழ் ஹீரோயின்களுக்கு கிடைத்த மிகப் பெரிய நல்ல வாய்ப்பு என்றும் கூறினார். 

 கடந்த வாரம் வெளியான ஆடை திரைப்படத்தை பார்த்த  பார்த்தவர் பிந்துமாதவி மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார் . இந்தப் படத்தில் நடித்த அமலாபாலுக்கு தான் பாராட்டுகளையும் தெரிவிப்பதாக கூறினார் .

மிகவும் தைரியமாக ஆடை திரைப்படத்தில் நடித்த அமலா பாலுக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவிக்கிறார் பிந்துமாதவி. மேலும் இது போன்ற கதாபாத்திரங்களில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்று நடிக்க நான் இப்பவே தயார் என்றும் கூறியுள்ளார்.