இரண்டு பக்கமும் பஸ்..! நடுவே சிக்கிய பைக்! நடுரோட்டில் அரங்கேறிய விபரீதம்! பிறகு நொடியில் நிகழ்ந்த அதிசயம்!

இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர்தப்பிய சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் ஒல்லூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஆஷிக் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பருடன் புழக்கள் என்னும் இடத்திலுள்ள ஹய்சன் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

திவான்ஜி கார்னர் என்ற பகுதியில் சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது, அவர்களுடைய வலப்புறத்தில் பேருந்து ஒன்று ஆட்களை ஏற்றிக்கொண்டிருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் இடப்புறத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த சிராயத் பேருந்து இவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது.

மோதிய அதிர்ச்சியில் இருவரும் கீழே விழுந்தனர். இருசக்கர வாகனம் பெருந்துறை அடியில் சிக்கிக்கொண்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர். உடனடியாக பேருந்து நிர்வாகிகள் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அருகிலிருந்த பொதுமக்கள் தவறு பேருந்து ஓட்டுநர் மீது என்பதை சுட்டிக்காட்டினார்.

பின்னர் பாதிக்கப்பட்ட இருவரும் பேருந்து ஓட்டுநரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவரிடமிருந்து மதுபோதை வாடை வந்ததாக குற்றம் சாட்டினர். பின்னர் பேருந்து நிர்வாகிகள் வேறொருவரை, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட போது மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது சனிக்கிழமை மதியம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.