ஒரே பைக்கில் 3 பேர்! அதிவேகம்! திடீரென வெடித்த டயர்! தூக்கி வீசப்பட்டு 2 பேர் துடிதுடித்து பலி! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

பள்ளத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தின் டயர் வெடித்ததில் 2 மாணவர்கள் பலியான சம்பவமானது கோயம்புத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் போத்தனூர் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஆஷிக் பாஷா, முகமது நசிர் மஸ்தான், முகமது அஸ்கர் ஆகிய மூன்று பள்ளிமாணவர்கள் வசித்து வந்தனர். 3 பேரும் நேற்றிரவு 12 மணியளவில் ஆற்றுப்பாலத்திலிருந்து போத்தனூருக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது சாய் நகர் என்னும் இடத்திற்கருகே இருசக்கர வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.

விழுந்த அதிர்ச்சியில் இருசக்கர வாகனத்தின் டயர் வெடித்துள்ளது. இதனால் இருசக்கர வாகனத்திலிருந்து 3 பேரும் பறந்து சென்றுள்ளனர். முகமது நசீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  மீதமுள்ள 2 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால் செல்லும் வழியிலேயே ஆஷிக் பாஷா உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் முகமது அஸ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.