ஒரே பைக்கில் 3 என்ஜினியரிங் மாணவர்கள்! எதிரே அதி வேகத்தில் வந்த வேன்! நொடியில் நிகழ்ந்த பயங்கரம்!

சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவமமானது தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே மைக்கேல்பட்டி என்னும் கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் அப்சல். இதே பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரின் மகனான ஆரோக்ய ஜோயலுடன் நண்பராக பழகி வந்தார். இவர்களுடன் பழமாநேரியை சேர்ந்த ஷபீக் அப்துல் ரஹ்மான் என்ற இளைஞனும் நண்பரானார்.

இவர்கள் 3 பேரும் தஞ்சாவூரில் உள்ள டிப்ளமா கல்லூரி ஒன்றில் படித்து வந்தனர். நேற்று மாலை கல்லூரி முடிந்த பிறகு 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.

தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில் திருமுல்லைவாயில் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே தாறுமாறாக திருச்சியிலிருந்து மயிலாடுதுறைக்கு செல்வதற்கான சரக்கு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனால் இளைஞர்கள் தடுமாறினர். துரதிஷ்டவசமாக சரக்கு லாரி இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

மோதிய அதிர்ச்சியில் ஜோயல், அப்சல் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டிய ஷபீக் பலத்த காயமடைந்தார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 2 மாணவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவமானது தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.