கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் U டர்ன்! அப்படியே நின்ற கார்..! பெண்ணுடன் படுவேகத்தில் பைக்கில் வந்த இளைஞன்! கண் இமைக்கும் நொடியில் நேர்ந்த பயங்கரம்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே மரப்பாலம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். ஜெகநாதன் தன்னுடைய உறவினரான பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். குவாரி ஆபீஸ் அருகே வந்து கொண்டிருந்தபோது, கார் ஒன்று யூ-டர்ன் எடுக்க முயன்றுள்ளது.
இதனை எதிர்பாராத ஜெகன்நாதன் இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியுள்ளார். அப்போது காரின் மீது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் ஜெகநாதனும், அவருடைய உறவினரும் தூக்கி அடிக்கப்பட்டனர். இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ஜெகநாதன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் விபத்துக்குள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.