முன்னாள் அமைச்சரிடம் விவாகரத்து கேட்கும் மனைவி! அதிர்ச்சி தரும் காரணம்

பீகார் மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மீது அவரது மனைவி கோர்ட்டில் தனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி தரும்படி புகார் அளித்துள்ளார்.


அந்த புகாரில் தேஜ் பிரதாப் யாதவ் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் அதை அவர் திருத்திக்கொள்ள முயற்சிப்பது இல்லை எனவும் அவரது மனைவி அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி தருமாறு மகளிர் மன்ற நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அதிக அளவு போதைக்கு அடிமையானதால் தினமும் போதையில் வந்து தன்னை  அடித்து துன்புறுத்துவதாகவும் உள்நாட்டு வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம், 2005 இன் கீழ் குடும்ப நீதிமன்றத்தில் இருந்து பாதுகாப்பு கோரி அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் பிரிவு 26 ன் கீழ் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் மற்றும் ரப்ரி தேவியின் மூத்த மகன் தேஜ் பிரதாப் இவருக்கும் ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும் கடந்த 2018 மே மாதம் திருமணம் நடைபெற்றது நிலையில் திருமணமான சில நாட்களிலேயே தேஜ் பிரதாப் போதைக்கு அடிமையானவர் என்பதை அவரது மனைவி கண்டுபிடித்துள்ளார்.

கடவுள் போலவே ஆடை அணிந்து கொண்டு தன்னை கடவுள் எனவும் கஞ்சா மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அவரது மாமியார் மற்றும் மைத்துனரிடம்  தெரிவித்தபோது அதற்கு அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இனிமேல் இது மாதிரியாக நடக்காது என உறுதி மட்டுமே அளித்தனர்.

இந்நிலையில் சில நாட்கள் செல்ல அவர் அதிகப்படியான போதைப் பொருட்களை உட்கொண்டு தன்னை துன்புறுத்தியதாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதாப் தெய்வங்கள் போல உடையணிந்து கொண்டு நான் தான் கடவுள் என்று கூறி அதிகப்படியான போதை பொருட்களை உட்கொண்டு வருகிறார்.

அதிகப்படியான போதைப் பொருள் கொண்டால் அவர் கடவுள் கிருஷ்ணாவை போல சோழி மற்றும் ரவிக்கை ஆகியவற்றை அணிந்து கொண்டு தன்னைக் கடவுள் என்று கூறி துன்புறுத்துவதாகவும் அவரது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவரிடம் இது குறித்து கேட்டால் தனக்கு சமைத்து போடுவதற்காக மட்டுமே நான் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மனமுடைந்த அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் தனது கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வாங்கி தரும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.