பிகில் அதிகாலை காட்சிக்கு தடை! மீறி திரையிட்டால் தியேட்டர்களுக்கு சீல்! அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!

தீபாவளிக்கு வெளியாகவுள்ள எந்த திரைப்படத்திற்கும், சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக கட்சி நிகழ்ச்சிக்காக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் பிகில் திரைப்படத்திற்கு பல திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் அதிகமாக வசூலிக்க படுவதாக பொதுமக்கள் புகார் கூறுவதை கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கடம்பூர் ராஜு அவர்கள், "பிகில் உட்பட எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதற்கும் மீறி சிறப்பு காட்சி என்ற அந்தஸ்தை அளித்து பணத்தை அதிகமாக வாங்கினால், அதற்கு அரசு பொறுப்பேற்காது. அரசு அனுமதி அளித்த நேரத்தை தவிர்த்து திரைப்படங்கள் திரையிடப்பட்டால், திரையரங்குகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றும் கூறினார்.

இந்த செய்தியானது விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.