பிகில் படத்தின் இந்த புதிய போஸ்டர் மலையாள படத்தின் காப்பியாம்..! வெளியானது ஆதாரம்!

இயக்குனர் அட்லி எப்போதுமே கதைகளை காப்பி எடுத்து புதிய படமாக எடுப்பவர் என்கிற பேச்சு உண்டு. ஆனால் தற்போது அவர் போஸ்டர்களையும் காப்பி அடிப்பதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.


மவுனராகம் படத்தை அப்படியே தூசி தட்டி சத்யராஜ், ஆர்யா மற்றும் நயன்தாராவை வைத்து ராஜா ராணி எடுத்த அட்லி பிறகு அபூர்வராகங்கள் படத்தின் கதையை லைட்டாக பட்டி டிங்கரிங் பார்த்து மெர்சலாக்கினார்.

முன்னதாக அவர் எடுத்த தெறி திரைப்படம் கூட விஜயகாந்தின் சத்தியன் படத்தின் காப்பி ஆகும். இந்த வரிசையில் தற்போது விஜயை வைத்து பிகில் படத்தை எடுத்து வருகிறார் அட்லி. பிகில் படமும் கூட இந்தியில் வெளியான சக் தே இந்தியா படத்தின் கதை தான் என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில் பிகில் படத்தின் டீசர் தேதியை தெரிவிக்கும் வகையில் ஒரு போஸ்டரை அட்லி வெளியிட்டார். அதில் காரில் இருந்து விஜய் இறங்கும் போது யாரையோ பாரப்பது போன்று போஸ் இருக்கும். இதே போல் லூசிபயர் படத்தில் காரில் ஏறும் போது மோகன் லால் யாரையோ மோகன் லால் பார்ப்பது போல் இருக்கும்.

முதலில் லூசிபயர் போஸ்டரை பாருங்கள்

இப்போது பிகில் போஸ்டரை பாருங்கள்

இப்போது இரண்டு போஸ்டர்களையும் சேர்த்து பாருங்கள்