பிகில் படத்தால் ரூ.20 கோடி தயாரிப்பாளருக்கு நஷ்டம்..! பிரபல பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிகில் திரைப்படத்தால் தயாரிப்பாளருக்கு 20 கோடி நஷ்டம் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.


கடந்த ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் பிகில் ஆகும். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, இந்துஜா போன்ற பல்வேறு நட்சத்திரங்களும் நடித்து இருந்தனர். நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

நடிகர் விஜயின் பிகில் திரைப்படம் பல்வேறு வசூல் சாதனையை படைத்தது என்றும் செய்திகள் இணையத்தில் வந்த வண்ணம் இருந்தன. இந்த திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூலை அள்ளியது என்றும் கூறப்பட்டு வந்தது.‌ இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனது யூடியூப் சேனலில் பிகில் திரைப்படத்தின் வசூல் பற்றிய அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பிகில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் 20 கோடி வரை நஷ்டம் என்று கூறியுள்ளதாக  அவர் தெரிவித்தார். இதன் மூலம் விஜய்யின் கால்ஷீட்டை பெறுவதற்கு இப்படிக் கூறுகிறார் . ஏனெனில் பிகில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த படம் என்றும் அந்த பத்திரிகையாளரே பதிலும் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சானது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.