பிகில் படத்திற்கு U A சான்று! படக்குழுவினர் ரிலீஸ் வேலையில் தீவிரம்!

அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது .


இந்நிலையில் பிகில் திரைப்படம் இன்று சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிகில் திரைப்படத்தை பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் பிகில் திரைப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதனால் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதற்கு உண்டான அனைத்து வேலைகளிலும் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். இந்த சென்சார் சர்டிபிகேட் இல் படத்தின் ரன்னிங் டைம் கொடுக்கப்பட்டுள்ளது . இரண்டு மணி நேரம் 58 நிமிட நீளம் கொண்டதாக பிகில் திரைப்படம் இருக்குமெனவும் சென்சார் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது .

சில தினங்களுக்கு முன்பு வெளியான பிகில் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் பிகில் திரைப்படத்திற்கு உண்டான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது .