அவரை திருப்திபடுத்தனும்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தொகுப்பாளிக்கு போடப்பட்ட கண்டிசன்!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊடகவியலாளர். ஒருவர் தன்னை உடலுறவுக்கு அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிக் பாஸ் நிகழ்ச்சியானது இந்திய நாட்டின் முதன்மை மொழிகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. இந்தியில் தொடங்கிய நிகழ்ச்சியானது தற்போது தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகியவற்றில் நிகழ்ந்து வருகிறது. 

பிக்பாஸ் தெலுங்கு மொழியில் 3-வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்த தெலுங்கு பிரபலம் ஒருவர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்னை படுக்க அழைத்தனர் என்று தொலைக்காட்சியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபல தெலுங்கு ஊடகவியலாளரான ஸ்வேதா ரெட்டியை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். 

பல்வேறு ஒருங்கிணைப்பாளர்கள் நிறைய முறை என்னிடம் தொடர்பு கொண்டனர். அவர்களில் முக்கியமாக ஸ்ரீனிவாசன், பிரபு ஆகியோர் ஒரு நாளைக்கு மூன்று முறையாவது தொடர்பு கொண்டுள்ளனர். நான் தெலுங்கு உலகில் பிரபலமானவர் என்பதால் அழைப்பதாக கூறினர். என்னுடைய குடும்பத்தாருடன் கலந்தாலோசித்த பிறகு ஒப்புக்கொண்டேன். அவர்கள் என்னிடம் ஒப்பந்த பேப்பர்களில் அவசர அவசரமாக கையெழுத்து வாங்கினர். பெரும்பாலும் நாங்கள் பஞ்சாரா மலைப்பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் சந்திப்போம்.

இணையதளங்களில், பங்கேற்கும் பிரபலங்களைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருந்தன. அப்போதும் என் பெயர் வரவில்லை. நான் மீண்டும் சீனிவாசனை ஒப்பந்த பேப்பர்களை அனுப்பி வைக்குமாறு கூறினேன். அவரும் அனுப்பினார். அத்துடன் ஜுன் மாதம்  4-ஆம் தேதி அன்று அதே உணவகத்திற்கு வந்து கலந்து கொள்ளுமாறு கூறினார்.

நானும் அங்கு சென்றேன். ஷ்யாம் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் என்னை இன்டர்வியூ செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று, "என் முதலாளியை மகிழ்விக்க, உங்களால் என்ன செய்ய முடியும்" என்று என்னிடம் கேட்டார். நான் கோபமடைந்து உங்கள் நிகழ்ச்சி பங்கேற்க இயலாது என்று கூறி வெளியேறினேன். இவ்வாறு ஸ்வேதா, ஸ்டார் மா தொலைக்காட்சியில் பேட்டியளித்தார். 

13-ஆம் தேதியன்று பஞ்சாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீனிவாசன், ரகு, ஷ்யாம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது தெலுங்கு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.