நம்ம தர்ஷனுக்கு இவ்வளவு அம்சமான தங்கையா? அழகால் பிக்பாஸ் வீட்டை நிறைத்த துஷாரா!

பிக் பாஸ் சீசன் 3, 80 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் கடந்த வாரம் வனிதா வெளியேறியதால், மீதமுள்ள 7 போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்திலிருந்து அவர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். லாஸ்லியா , சேரன் , சாண்டி, முகேன் , ஷெரின்,தர்ஷன் போன்ற பிக்பாஸ் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அவர்களை பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் வந்தனர். அதில் குறிப்பாக தர்ஷனை பார்ப்பதற்காக அவரது அம்மாவும், தங்கையும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர்.

தர்ஷன் தங்கை துஷாரா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும்போது அவரை கண்ட ரசிகர்கள், துஷாராவை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். மேலும் பிக்பாஸ் வீட்டில் எடுக்கப்பட்ட துஷாராவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அவரை பிரபலமாக்கி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் தொடக்கத்தில் லாஸ்லியாவின் அழகான புகைப்படங்களை ஷேர் செய்து வந்த ரசிகர்கள் , தற்போது தர்ஷன் தங்கையான துஷாராவின் அழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அவரை பிரபலமாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .