2வது கல்யாணத்துக்கு தயாரான பிக்பாஸ் மிதுன்..! மாப்பிள்ளை அவர் தானாம்..!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி கோலாகலமாக முடிவடைந்தது.


இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் மாடல் அழகியான மீராமிதுன் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருந்தார். போட்டி தொடங்கிய நாள் முதலே சக போட்டியாளர் இடம் சச்சரவில் ஈடுபட்டு வந்திருந்தார் மீரா. அதன் உச்சகட்டமாக தன்னுடைய சக போட்டியாளரான இயக்குனர் சேரன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டார் என்று அவர் மீது புகார் கூறினார்.

இதனைத்தொடர்ந்து வார இறுதியில் வரும் கமலஹாசன் இதற்கான குறும் படம் ஒன்றை வெளியிட்டு சேரன் மீது எந்தத் தவறும் இல்லை என்று நிரூபித்து காட்டினார். இதன்மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். மீரா அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரிடம் பணம் பறித்ததாக கூறப்பட்டது. அந்த அந்தப் பணத்தை திருப்பி கேட்டதற்கு மீரா தராததால் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுபோன்ற பல சர்ச்சைகளில் சிக்கி தவித்தார் நடிகை மீரா. மேலும் இன்னும் சிலர் தனக்கு அவதூறு ஏற்படுத்துவதற்காக நிறைய வழக்குகளில் சிக்கவைத்து வருகின்றனர் எனவும் மீரா குறை கூறி வந்த நிலையில் , தனக்கு தமிழ் சினிமாவே வேண்டாம் நான் இந்தி சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று பாலிவுட் பக்கம் கிளம்பினார் . பாலிவுட்டில் நடிப்பதற்காக சென்ற மீரா அங்கு தீவிரமாக போட்டோஷுட்டில் ஈடுபட்டார்.

இதனையடுத்து தினம்தோறும் சமூக வலைதளத்தின் மூலம் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை தன்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஆனால் சிலநாட்களிலேயே அங்கேயும் தன்னுடைய பட வாய்ப்புகளை தனக்கு எதிரானவர்கள் தட்டி விடுகிறார்கள் என்று குறை கூறினார் மீரா. இம்மாதிரியான செயல்களால் தான் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளதாகவும் கூறிய மீரா தற்போது அதிலிருந்து வெளி வருவதற்கு ஒரே வழி நான் இரண்டாவது திருமணத்திற்கு ஆயத்தமாக இருப்பது மட்டும்தான் என்று கூறி வருகிறார். 

தன்னுடைய ரசிகர்களிடத்தில் கெட்டுப் போன பெயரை மீட்டெடுக்கவும் தான் பட்ட மன உளைச்சலில் இருந்து விடுபடவும் தன்னுடைய நீண்ட நாள் நண்பர் மற்றும் காதலரை கரம் பிடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது . மீரா தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி உள்ள விஷயத்தை அறிந்து கொண்ட நெட்டிசன்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்