முகேன் ஒன்னும் கஷ்டப்பட்டு முன்னேறவில்லை..! தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் போட்டியானது கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி கோலாகலமாக முடிவடைந்தது.


இந்த பிக் பாஸ் சீசன் 3 இன் வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். முகேன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதுதான் சிறுவயது முதல் பல கஷ்டங்களை அனுபவித்து தான் இந்த இடத்தை பிடித்ததாகவும் கூறியிருந்தார். மேலும் பிக் பாஸ் டைட்டிலை வின் செய்த பின்பு அவர் புற்று நோயாளிகளுக்காக பணத்தை தரப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை பற்றி முகேன் இடம் கேட்டபொழுது அவர் இந்த பணத்தை என்ன செய்யப்போகிறேன் என்று இதுவரை நான் யோசிக்கவில்லை. விரைவில் யோசித்து அந்த பணத்தை நான் என்ன செய்யப் போகிறேன் என்று உங்களிடம் கூறுகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பேசிய முகேன் இடம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபொழுது இந்த நிலை அடைவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளேன் என்று நீங்கள் கூறி இருந்தீர்கள் அல்லவா , ஆனால் அதனை உங்கள் தந்தையும் உங்களுடைய சகோதரரும் முற்றிலுமாக மறுக்கிறார்கள் . ஏன் அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முகேன், சிறுவயது முதலே நான் அதிகமான கஷ்டத்தை அனுபவித்து உள்ளேன் . ஆனால் இதனை பற்றி என்னுடைய தந்தையிடமும் சகோதரனிடம் நான் பகிர்ந்து கொண்டதில்லை . இதனைப் பற்றி தெரிய வேண்டும் என்றால் என் நெருங்கிய நண்பர்களிடம் கேட்டால் உங்களுக்கு புரியும். அவர்களிடம் மட்டும் தான் என்னுடைய கஷ்டங்களை நான் எப்போதுமே பகிர்ந்து கொள்வேன் . மேலும் என்னுடைய அம்மாவுக்கு என்னைப் பற்றிய எல்லா விஷயங்களும் நன்றாக தெரியும் என்று கூறியிருந்தார்.