விஜய் டிவியின் பிராடு..! துரோகம்..! ஆனாலும் பிக்பாஸ் எவிக்சனுக்கு பிறகு தர்ஷன் வெளியிட்ட அதிரடி அறிக்கை! நெகிழும் ரசிகர்கள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியானது மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் தர்ஷன் மிகவும் சக்திவாய்ந்த போட்டியாளராக மக்கள் மனதில் இடம் பெற்றார். இலங்கையை சேர்ந்த இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக நிச்சயம் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியேற்றப்பட்டார்.

இந்த சம்பவம் தர்ஷனுக்கு மட்டுமல்லாமல் அவரை நம்பி வாக்களித்த ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும். ஆனால் இதனை சிரித்துக்கொண்டே எதிர்கொண்ட தர்ஷன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருந்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் வெளியே வந்தவுடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் பல  உருக்கமான எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார் தர்ஷன். என் வாழ்வில் மிகவும் சிறப்பான நாளாக இந்நாளை கருதுகிறேன் . ஏனெனில் எனக்கு தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவரும் என்மீது அன்பு செலுத்துகிறார்கள்.

இதுவரை ஒருமுறை கூட பார்த்திராத பலரும் என்னை மிகவும் நேசிக்கிறார்கள் என்று எண்ணும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட அருமையான வாய்ப்பை எனக்கு தேடித்தந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும், விஜய் டிவிக்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தில் ஒருவராக என்னை நினைப்பது மிகப்பெரிய விஷயம். இதற்கு அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் பரிசுத்தமான அன்பை என் மனதார உணர முடிகிறது என்று அழகான பதிவை வெளியிட்டு இருக்கிறார். நிகழ்ச்சியில் பிராடு செய்து தர்சனை விஜய் டிவி வெளியேற்றிவிட்டதாக மக்கள் கொதித்து வருகின்றனர்.

ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கு வாய்ப்பு அளித்த விஜய்டிவிக்கு நன்றி தெரிவித்துள்ள தர்ஷனின் பதிவு அவரது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.