உடலின் அந்த பாகத்தை மட்டும் துண்டாக புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிக்பாஸ் நடிகை..! யார் தெரியுமா?

பிக்பாஸ் நட்சத்திரமான ரேஷ்மா உடலின் அந்த பாகத்தை மட்டும் துண்டாக காட்டும் புகைப்படத்தை எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.


சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடிகை ரேஷ்மா புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடியின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை ரேஷ்மா மிகவும் பிரபலமானார். அதன் பிறகு கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகை ரேஷ்மா பிரபலமானார்.

தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே இருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்த நடிகை ரேஷ்மா தற்போது நடந்துவரும் லாக்டவுனால் வீட்டிலேயே இருந்து தனது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்தார்.

தற்போது மீண்டும் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். ரேஷ்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ரிட் புகைப்படமாக கவர்ச்சிகரமாக சேலை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த கிரீட் புகைப்படத்தில் அவரது இடுப்பு மட்டும் துண்டாக தெரிகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருசிலர் கிறங்கிப் போய் உள்ளனர். மற்றும் சிலர் அவரை வறுத்து எடுக்க ஆரம்பித்து விட்டனர். நடிகை ரேஷ்மா வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.