பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறை..! யாருக்குமே கிடைக்காத பெருமை! முதன்முறையாக முகேனுக்கு கிடைத்தது! என்ன தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக முடிவடைந்தது.


கடந்த 105 நாட்களாக நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத ஒன்று இந்த மூன்றாவது சீஸனில் நடைபெற்றுள்ளது.

அதாவது எப்பொழுதுமே பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கும் போது டிக்கெட்டு பினாலே டாஸ்க் நடைபெறுவது வழக்கம் . இந்த டிக்கெட்டு ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிப் போட்டியில் பங்கேற்கலாம் என்பது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதியாகும் .

அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டிக்கெட்டு பின்னாலே டாஸ்கை மலேசியாவை சேர்ந்த முகேன் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் சினேகன் இரண்டாவது சீசனில் ஜனனியும் இந்த டாஸ்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நேரடியாக நுழைந்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. பொதுவாகவே டிக்கெட் பின்னாலே டாஸ்க் வென்றவர்கள் இதுவரை பிக் பாஸ் போட்டியை வென்றதில்லை என்ற ஒரு மனப்பாங்கு மக்களிடத்தில் இருந்தது.

அதேபோல் இந்த சீசனிலும் இந்த டிக்கெட்டு பினாலே டாஸ்கில் வெற்றி அடைந்த முகேன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவது சந்தேகம்தான் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தக் கோட்பாட்டை முற்றிலுமாக தகர்க்கும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆகவே டிக்கெட்டையும் வென்று இறுதிப் போட்டியில் வென்று புதிய சரித்திரத்தை உருவாக்கியிருக்கிறார் மலேசியாவை சேர்ந்த முகேன் என்றுதான் கூறவேண்டும்.