அபிராமி ரொம்ப மட்டமான பொண்ணு..! எல்லாத்துக்கும் ஆள் வச்சிருக்கு..! மீரா மிதுன் டென்சன்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக முடிவடைந்தது.


இந்நிகழ்ச்சியில் வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியானது கடந்த ஜூன் மாதம் கோலாகலமாக துவங்கியது.

மாடல் அழகியான மீரா மிதுன் மற்றும் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் போன்றோரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி துவங்கிய முதலில் மீரா மிதுன் பலருடனும் சண்டையிட்டு பெரும் சர்ச்சைகளை கிளப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்கேற்ற பொழுதே மீராவுக்கும் அபிராமிக்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. அதற்குப் பின்பு மீரா மக்களால் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். தற்போது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது முடிவு பெற்ற நிலையிலும் மீராவும் அபிராமியும் சமூகவலைத்தளத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.

அதாவது அபிராமியின் ரசிகர்கள் மாடல் அழகியான மீராவை சமூகவலைத்தளத்தில் கண்டபடி கமெண்ட் செய்திருக்கின்றனர். அபிராமியின் ரசிகர் ஒருவர் செய்த கமெண்ட்டை படித்த மீரா அபிராமியை தற்போது சமூகவலைத்தள பக்கத்தில் கண்டபடி விளாசியுள்ளார்.

"இது அபிராமியின் மட்டமாக பழக்கமாக உள்ளது மேலும் அபிராமி நீங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பணம் அளித்து என்னை கமெண்ட் செய்வதற்கான ஆட்களை நியமித்து உள்ளீர்களா ? எனவும் மீரா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதனை நீங்கள் உடனே நிறுத்திக் கொள்ளுங்கள் " எனவும் மீரா கூறியுள்ளார். தற்போது இந்த பதிவானது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.