பிக்பாஸ் பைனல்! கமல் கொடுத்த திடீர் விருது! உருகிய சேரன்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் சிறந்த ஒழுக்கம் மிகுந்த நபருக்கான விருது சேரனுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.


பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் சிறந்து விளங்கியவர் களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. கேம் சேஞ்சர் விருது கவினுக்கு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மிகவும் ஒழுக்கமாக பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டதற்கான விருது அறிவிக்கப்பட்டது.

அந்த விருதை சேரனுக்கு கொடுப்பதாக கமல் அறிவித்தார். அரங்கமே அதிர்ந்த நிலையில் சேரன் அந்த விருதைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் சேரன் தான் இந்த விருதுக்குத் தகுதியானவர் என்று புகழாரம் சூட்டினார்.

சேரன் தான் பிக் பாஸ் வீட்டில் அனைத்திலும் சரியாக நடந்து கொண்டார் என்று பாராட்டி இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.