என் கணவர் தாலியை கழட்டி வைக்கச் சொன்னார்! பிக்பாஸ் மதுமிதா வெளியிட்ட ஷாக் தகவல்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது 17 போட்டியாளர்களை கொண்டு தொடங்கியது.


இந்நிகழ்ச்சியில் காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் தொடர்ச்சியாக இவர் போட்டியாளர்களில் மூலமாக நாமினேட் செய்யப்பட்டு வந்தார். இருப்பினும் மக்கள் இவரை காப்பாற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஹலோ ஆப் சார்பாக காவிரி நதிநீர் பற்றின டாஸ்க் செயல்படுத்தப்பட்டது. இந்த டாஸ்க் நடைபெற்றபோது மதுமிதாவுக்கு சக போட்டியாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை உருவானது.

இந்த பிரச்சனையின் உச்சக்கட்டமாக ஆத்திரத்தில் கத்தியை எடுத்து தன்னுடைய கையை தானே வெட்டிக் கொண்டார் நடிகை மதுமிதா . உடனே பிக் பாஸ், நிகழ்ச்சியின் விதிமுறைகளை மதுமிதா மீறிவிட்டார் என்று கூறி நிகழ்ச்சியை விட்டு அவரை வெளியேற்றி விட்டார் . இதற்கு பின்பு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மதுமிதாவின் உடல்நிலை சரியான பின்பு பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார். தன்னுடைய போட்டியின் அனுபவத்தை பற்றியும் சக போட்டியாளர்களின் பண்புகளையும் குணங்களைப் பற்றியும் ஒவ்வொரு பேட்டியிலும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடிகை மதுமிதா நிகழ்ச்சியில் தாலி அணியாமல் சென்றது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் தொகுப்பாளர், "பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் தாலி அணியவில்லை ?" என்று கேள்வி எழுப்பினார் . அதற்கு பதில் அளித்த அவர் பிக்பாஸ் தான் என்னை தாலி அணியாமல் வர வேண்டும் என்று கட்டளையிட்டார். காரணம் போட்டியின்போது விளையாட்டில் பங்கேற்கும் போது யாரேனும் தெரியாமல் அதனை இழுத்து விட்டால் அது ஆபத்தில் முடியும் எனவும் மேலும் தாலி மைக்கில் உரசவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி அதனை கழட்டி வைக்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தினார்.

இதனைக் கேட்ட பின்பு என்னுடைய கணவரிடம் கேட்டேன். அவரும் கழட்டி வைத்துவிட்டு செல்லுமாறு கூறினார். இதனால் அவர் முழு சம்மதத்துடன் தாலியை கழட்டி வைத்து தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் நுழைந்தேன் என்று மதுமிதா பதிலளித்தார்.