என் கைகளை பாருங்க..! 12 வெட்டுக் காயங்களுடன் மதுமிதா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.


இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் எதிர்பாராதவிதமாக மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இதற்கு காரணம் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதே போல் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயற்சி செய்து பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியேறினார்.

அதேபோல் மதுமிதாவும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்காக தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மதுமிதாவின் தற்கொலைக்கான சரியான காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை. 

மதுமிதாவின் தற்கொலை சம்பவம் குறித்து அவரது கணவர் ஜோயல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசினார். அப்போது பேசிய அவர் திடீரென்று ஒரு நாள் இரவு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உங்களது மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

எனவே அவர்களை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் எனவும் கூறியுள்ளனர் . இதனை கேட்டு மிகவும் பதற்றத்துடன் ஜோயல் அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது தன் மனைவி கையில் கத்தியால் 12 முறை வெட்டிக் கொண்டதை பார்த்த ஜோயல் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஒருவேளை கையில் வெட்டப்பட்ட கத்தி ஆனது கழுத்தில் கட்டப்பட்டு இருந்தால் என் மனைவிக்கு என்ன ஆகியிருக்கும் ? என்று மிகவும் ஆதங்கத்துடன் பேசியிருந்தார் மதுமிதாவின் கணவர் ஜோயல்.