அந்த 41 வயது நடிகர் மீது தான் எனக்கு மோகம்..! 27 வயது நடிகை வெளியிட்ட அந்தரங்க சீக்ரெட்! யார் தெரியுமா?

நடிகை ரித்விகாவுக்கு பிரபல கதாநாயகன் மீது மோகமிருப்பதாக  கூறியிருப்பது கோலிவுட்டில் வைரலாகி வருகிறது.


பிக்பாஸ் சீசன் 2 பட்டத்தை வென்றவர் நடிகை ரித்திகா. இதன் மூலம் இவருடைய ரசிகர் பட்டாளம் இலகுவாக அதிகரித்தது. இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இவர் அறிமுகமானார்.

மேலும் மெட்ராஸ் திரைப்படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தார். அதன் பின்னர் கபாலி, இருமுகன், சிகை ஆகிய திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் இவர் குண்டுபடம் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இவருக்கு எந்த நடிகரின் மீது மோகம் இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் சிறிதும் யோசிக்காமல் விஜய் சேதுபதி என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது கோலிவுட் திரையுலகில் வைரலாகி வருகிறது. நடிகை ரித்விகாவுக்கு 27 வயது ஆகும் நிலையில் விஜய் சேதுபதிக்கு 41 வயது என்பது குறிப்பிடத்தக்கது.