பிக்பாஸ் நிகழ்ச்சியோடு தர்ஷனை கழட்டிவிட்டுவிட்டேன்..! ஷெரீன் வெளியிட்ட சீக்ரெட்! காரணம் இது தானாம்..!

பிரபல தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது கடந்த ஜூன் மாதம் துவங்கியது.


இந்த பிக் பாஸ் 3, நிகழ்ச்சியை  உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த போட்டியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர் இந்த போட்டியின் நிறைவு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற இலங்கையை சேர்ந்த தர்ஷன் மற்றும் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷெரின் ஆகியோர் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது . ஆனால் இதனை இருவருமே மறுத்து விட்டனர். போட்டியாளர் தர்ஷன் ஏற்கனவே நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருவதாக கூறினார். தர்ஷன் காதலிப்பது தெரிந்தும் செரின் அவரை காதலிப்பது தவறு என்று சக போட்டியாளரான வனிதாவும் கூறினார். கடைசியில் தர்ஷன் இடத்தில் ஷெரின் affair வைத்திருப்பதாக வனிதா கூறியது, ஷெரின் -ஐ மிகவும் கோபமடையச் செய்தது . இதனால் இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் இவர்களுக்கிடையில் இருப்பது நட்பு மட்டும்தான் என்று பதில் கூறி வந்த நிலையில் , தர்ஷன் காக கடிதம் ஒன்றை எழுதினார் ஷெரின். அதனை எல்லார் முன்பும் படித்து காட்ட வேண்டும் என்று கூறிய நிலையில் அதை யாருக்கும் தெரியாமல் உடனடியாக கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார் ஷெரின். இருப்பினும் அந்த கடிதத்தை தர்ஷன் படித்து விட்டார். இதனையடுத்து தர்ஷன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் போது அவரது பெட்டியில் அவருக்கே தெரியாமல் கடிதம் ஒன்று எழுதி வைத்து அனுப்பினார் நடிகை செரின். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவு பெற்ற நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஊடகங்கள் பலவற்றுக்கு பேட்டி அளித்த வண்ணம் உள்ளனர்.

அந்தவகையில் ஷெரின் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில், தர்ஷன் பற்றி பேசியிருந்தார். பிக்பாஸ் வீட்டில் நாங்கள் இருக்கும்பொழுது அவருக்காக நான் எழுதிய கடிதத்தை அவர் படித்து விட்டார். அந்த கடிதத்திற்கான பதிலை தர்ஷன் வெளியே வந்ததும் கூறுவேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இருவரும் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்பும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவில்லை என்று நடிகை ஷெரின் கூறியிருக்கிறார். மேலும் அவரை தொடர்பு கொள்வதற்கான எந்த ஒரு முயற்சியிலும் தான் இறங்க வில்லை எனவும் கூறினார் நடிகை ஷெரின்.