2வது கணவன் மூலம் 2வது குழந்தை பெற்றெடுத்த பிக்பாஸ் நடிகை..! யார் தெரியுமா?

பிக் பாஸ் புகழ் டிம்பி கங்குலி தனது இரண்டாவது குழந்தையை ஈஸ்டர் ஈவ் அன்று பெற்று எடுத்திருக்கிறார்.


ராகுல் மகாஜனின் முன்னாள் மனைவியும் பிக் பாஸ் 8 போட்டியாளருமான டிம்பி கங்குலி சமீபத்தில் சமூக ஊடகங்களின் வாயிலாக தனது ரசிகர்களுடன் சில மகிழ்ச்சியான செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். அதுதான் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ள செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். 

இந்த மாடல்-நடிகை ஈஸ்டர் தினத்தன்று தனது இரண்டாவது குழந்தையான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக அறிவித்தார். டிம்பி முதலில் ராகுல் மகாஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்துவிட்டனர். 

இதனையடுத்து துபாய் நாட்டு தொழில் அதிபர் ஆன ரோகித் ராய் என்பவரை கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்தப் பெண் குழந்தைக்கு ரீன்னா என்று இந்த தம்பதியினர் பெயர் சூட்டினர்.

பின்னர் கடந்த டிசம்பர் மாதம் சமூக வலைதளப் பக்கங்களில் மூலமாக தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அதாவது தான் மீண்டும் தாயாகப் போவதாக மகிழ்ச்சியை தன் ரசிகர்களிடம் பதிவு மூலம் வெளிப்படுத்தினார். இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் அவருக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பினர்.

இந்நிலையில் அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தைய கடந்த ஈஸ்டர் தினத்தன்று பிறந்துள்ளது. மகிழ்ச்சியை தன் ரசிகர்களிடம் டிம்பி புகைப்படம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தையின் அழகிய கால்களை தன்னுடைய கைகளில் வைத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் அந்தக் குழந்தைக்கு ஆரியன் ராய் என்ற பெயரிட்டு உள்ளதாகவும் அவர் தன்னுடைய பதிவில் கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அவருக்கு வாழ்த்துச் செய்தி களையும் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

தற்போது டிம்பி பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பட்டு வருகிறது.