முகேனுக்காக எதை வேண்டுமானாலும் கொடுப்பேன்! பிக்பாஸ் அபிராமி பிடிவாதம்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஆனது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்  வெளியேற்றப்படுவார் . அந்தவகையில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர்தான் அபிராமி வெங்கடாச்சலம்.

இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் எதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதை பற்றியும் கூறியிருக்கிறார்.

அபிராமியின் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தத் திரைப்படத்தில் அபிராமிக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியே சென்ற பிறகு அபிராமி சந்தித்து பேசிய  அனைவரும் அவரை பாமி என்ற அவருடைய கதாபாத்திரத்தின் பெயரை வைத்து அழைத்துள்ளனர் .

 இதனை பார்த்து அபிராமி என்னுடைய கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை நினைத்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவரும் என்ற நிலையில் அதனுடைய புரமோஷன் வேலைகளில் ஈடுபடாமல் நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றீர்கள் ? என்று கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த அபிராமி , இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு நாளும் நான் ரசிகர்களின் இல்லத்திற்கு செல்ல முடியும் அது மட்டுமில்லாமல் அவர்கள் என்னை நன்றாக புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்த்தேன். அதுமட்டுமில்லாமல் இந்த மிகப்பெரிய வாய்ப்பை தவற விடவும் எனக்கு மனம் வரவில்லை என்றும் கூறினார்.

இதற்குப் பின் அபிராமி மற்றும் மோகன் இருவருக்கும் இடையேயான காதல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அபிராமி முடியின் மீது நான் வைத்துள்ள காதல் அளவு கடந்தது அது எதையும் எதிர்பார்த்து வந்ததல்ல அவருக்காக  என் வாழ்நாள் முழுவதும் காத்துக் கொண்ட நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

அவருக்காக நான் என்ன பழியையும் சுமக்க  தயாராக இருக்கிறேன,் நான் அவர் மீது கொண்டுள்ள காதல் மிகவும் புனிதமானது என்றார் அபிராமி .

இதனையடுத்து தனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் அதில் நடிப்பதற்கு  தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் தற்போது தல  அஜித்துடன் நடித்துவிட்டார் அடுத்ததாக தளபதி விஜயுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறினார்.