கொஞ்சம் பணம்..! கொஞ்சம் புகழ்..! லாஸ்லியாவிற்காக அல்ல..! பிக்பாஸில் கலந்து கொண்டது ஏன்? கவின் வெளியிட்ட உருக்கமான பதிவு!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடந்து முடிந்தது.


கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 போட்டியாளர்களில் சரவணன் மீனாட்சியில் நடித்த கவினும் ஒருவராவார்.

இவர் இந்த நிகழ்ச்சியில் எவரும் எதிர்பாராத விதமாக ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு போட்டியை விட்டு தானாக வெளியேறினார் என்பது அவரது ரசிகர்களிடத்தில் ஏமாற்றத்தை அளித்தது என்று தான் கூற வேண்டும். இதன் காரணமாக இவருக்கு "கேம் சேஞ்சர் " என்ற ஒரு விருதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனலில் அளிக்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது கவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மன உருக்கமாக பல செய்திகளையும் அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு கூறியுள்ளார். "நான் எதற்காக இந்த நிகழ்ச்சிக்கு சென்றேன் என்று உங்கள் அனைவருக்கும் புரிய வைக்க ஆசைப்படுகிறேன்.

நான் எதிர்பார்த்தது கொஞ்சம் பணம் மற்றும் புகழ் அவ்வளவுதான். கடந்த இரு ஆண்டுகளாகவே எனக்கு எதிலும் வெற்றி பெற முடிய முடியாத நிலை ஏற்பட்டது. ஆகையால் இந்த பிக்பாஸ் போட்டியை எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதி மீண்டும் என்னுடைய பழைய நிலைக்கு செல்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக நான் எதிர்பார்த்தேன்.

மேலும் என்னால் முடிந்த வரை உண்மையாகவும் நேர்மையாகவும் இந்த போட்டியில் நான் பங்கேற்றேன். இருப்பினும் ஒரு சில பிரச்சனைகளால் என்னால் தொடர்ந்து இந்த போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 


இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஏற்கனவே நான் தெரிந்து கொண்டிருந்தாலும் இதனை பற்றி முழுமையாக புரிந்து கொள்ள சற்று நேரம் எனக்கு தேவைப்பட்டது. அந்த நேரத்தில் என் மனதில் ஏற்பட்ட ஒருசில குழப்பங்களால் என்னால் போட்டியில் முழுமையாக கவனம் செலுத்த இயலவில்லை .

அதுவே இந்த போட்டியை விட்டு நான் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாகவும் விளங்கியது. கடைசியாக உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி கூறிக் கொள்கிறேன் மேலும் உங்களுடைய அன்பும் ஆதரவும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எப்போதும் இருக்கவேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன்" என்று அந்த பதிவில் கூறியிருந்தார் பிக் பாஸ் கவின்.

ஆனால் இந்த பதில் லாஸ்லியா குறித்து கவின் எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றதும் லாஸ்லியாவுடன் பழகியதும் குறித்து அவர் பிறகு ஏதேனும் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.