பெங்களூரில் இளம் பெண் ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞரை அந்தப் பெண் நடுரோட்டில் செருப்பை வைத்து தாக்கிய சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடுரோட்டில் வீடியோ எடுத்த இளைஞர்! தட்டிக் கேட்ட இளம் பெண்! பிறகு அரங்கேறிய பரபரப்பு சம்பவம்!

பெங்களூரில் வசித்து வரும் சுனில்(31 வயது) என்பவர் இளம் பெண் ஒருவரை ஆபாசமாக படம் எடுத்த வீடியோ பதிவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி வந்துள்ளார் . கடந்த சனிக்கிழமை அன்று பெங்களூரில் உள்ள ராமமூர்த்தி தெருவில் உள்ள எல்லையம்மன் கோவில் அருகில் அந்தப் பெண்ணிடம் நடுரோட்டில் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் கடும் கோபம் கொண்டு அந்த நபரை தன்னுடைய செருப்பால் அடித்துள்ளார். இளம்பெண் சுனில் என்பவரை செருப்பால் அடித்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த பொதுமக்கள் அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர் . தற்போது அந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சுனில் பெங்களூரிலுள்ள பிக் பஜாரில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுனிலுக்கும் இளம்பெண் ஒருவருக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் நட்பாக மாறிய பின்பு இருவரும் ஒருவரை ஒருவர் கடந்த மே மாதம் 2018 ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர்.
அப்போது அந்த பெண்ணுக்கு தெரியாமல் அவள் குடித்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை தனியாக ஒரு ரூமில் அடைத்து வைத்துள்ளார். மயக்கத்தில் இருந்த அந்த இளம்பெண்ணை ஆடைகளை கலைத்து ஆபாசமாக வீடியோ பதிவு செய்துள்ளார் சுனில் அந்த வீடியோவை வைத்து அந்த பெண்ணை தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறி இத்தனை நாட்களாக மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அந்த இளம்பெண்ணை சுனில் , பின்தொடர்ந்து வந்துள்ளார். தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று அந்த பெண்ணை வற்புறுத்தி இருக்கிறார் . அதனால் மிகவும் கோபமடைந்த அந்த பெண் தன்னுடைய செருப்பை கழட்டி சரமாரியாக அடித்துள்ளார்.
இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. அங்கிருந்த பொதுமக்கள் இதனை பற்றி போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர் . உடனே ராமமூர்த்தி நகர் போலீசார் விரைந்து வந்து அந்த இடத்தில் இருந்து சுனில் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.