வைரலாகும் பிக்பாஸ் லாஸ்லியா வீடியோ..! உண்மை நிலை என்ன? சற்று முன் வெளியான தகவல்!

சென்னை: ''எங்க லாஸ்லியா சொக்க தங்கம், அவரை யாரும் குறை சொல்லாதீங்க,'' என்று அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பொங்கியுள்ளனர்.


இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளரான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக, தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவரது பெயரில் லாஸ்லியா ஆர்மி ஒன்றை ஏற்படுத்தி, அவரது ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் சர்ச்சையான பதிவுகளை வெளியிடுவது வழக்கம்.

சமீபத்தில்தான், லாஸ்லியாவுக்கு சினிமா பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. இந்நிலையில், லாஸ்லியாவின் ஆபாச படம் என்று கூறி ஒரு 5 நிமிட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில், லாஸ்லியா போல முகச்சாயல் உள்ள ஒரு பெண், இளைஞர் ஒருவருடன் உல்லாசம் அனுபவிக்கிறார்.

அதனை சிலர், 'லாஸ்லியாதான் இவர்', 'இவ்வளவு மோசமான பெண்ணா இவர்?', என்றெல்லாம் கூறி சமூக ஊடகங்களில் காரசாரமாக விமர்சிக்கின்றனர். இதற்கு லாஸ்லியா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, இலங்கையிலேயே உள்ளார். எனினும், லாஸ்லியாவின் ரசிகர்கள் இத்தகைய ஆபாச சர்ச்சைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

எங்கள் லாஸ்லியா நல்லவர். வேறு ஒரு பெண்ணின் வீடியோவை வைத்து, எங்கள் தங்கத்தின் மீது வீண் பழி போடாதீர்கள் என்று லாஸ்லியா ஆதரவாளர்கள் பதிவு வெளியிடுவதைக் காண முடிகிறது. கொரோனா வைரஸ் பீதி ஒருபுறம் இருந்தாலும், இது போன்ற சர்ச்சைகளில் மிக அக்கறையுடன் பங்கேற்பதையும் தமிழ் மக்கள் வாடிக்கையாக வைத்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.