பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சத்துடன் வெளியேறியது ஏன்? புகைப்படத்தை வெளியிட்டு கவின் சொன்ன காரணம்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக முடிவு பெற்றது.


பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 15 போட்டியாளர்களை கொண்டு தொடங்கியது. 15 போட்டியாளர்களில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகர் கவின் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த கவின் யாருமே எதிர்பாராதவிதமாக பிக்பாஸ் அளித்த 5 லட்சத்தை பெற்றுக் கொண்டு போட்டியை விட்டு தானே வெளியேறினார்.

கவின் போட்டியை விட்டு வெளியேறிய நிலையில் அவரது தாயார் சீட்டு மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்றார். இந்த சம்பவம் கவினின் பெயரை மிகவும் சேதப்படுத்தியது என்று தான் கூற வேண்டும்.

இதனையடுத்து கவின் சிறை தண்டனை பெற்று வந்த தன்னுடைய தாயாரை ஜாமினில் வெளியே கொண்டு வந்தார். தற்போது கவின் தன்னுடைய தாயார் மட்டும் பாட்டி ஆகியோருடன் வீட்டில் அமர்ந்திருக்கும் விதமான புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.