நான் பிக்பாஸ் வீட்டில்..! பழைய காதலனுடன் தனி அறையில் என் காதலி..! கழட்டிவிட்டதற்கான காரணத்தை தெரிவித்த தர்ஷன்!

பிரபல நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வைத்த அடுக்கடுக்கான புகார்களுக்கு தர்ஷன் பதிலடி கொடுத்துள்ளார்.


பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் பிரபல நடிகை சனம் ஷெட்டியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனக்கும் தர்ஷனுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும் தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் அதோடு மட்டுமல்லாமல் 15 லட்சம் ரூபாயை தர்ஷன் தன்னிடமிருந்து வாங்கியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். நடிகை சனம் ஷெட்டியின் பேட்டி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடிகை சனம் ஷெட்டியின் பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் 2016ம் ஆண்டுதான் நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்ததாகவும் பின்னர் ஒரு புரோடக்சன் கம்பெனியில் வேலை செய்து கொண்டு சிறு சிறு விளம்பர படங்களில் நடித்ததாக கூறி இருந்தார்.

விளம்பர படங்களில் நடிக்கும் போதுதான் நடிகை சனம் ஷெட்டி தனக்கு அறிமுகமானார் என்றும் விளம்பரப் படங்கள் மற்றும் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு அவர் தனக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார் எனவும் தர்ஷன் கூறினார். இதனால் எங்களுக்குள் காதல் ஏற்பட்டு நாங்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் எனவும் அவர் கூறினார். ஆனால் நிச்சயதார்த்தம் நடந்தது என் குடும்பத்திற்கு தெரியாது எனவும் நிச்சயதார்த்தம் நடந்தது நடிகை சனம் ஷெட்டியின் வீட்டில் உள்ளோருக்கு தான் தெரியும் எனவும் தர்ஷன் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகை சனம் ஷெட்டி தனக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருவதாகவும் அதற்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது எனவும் தர்ஷன் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த நடிகை சனம் ஷெட்டி எனக்கு வரும் பட வாய்ப்புகளை தயாரிப்பாளரிடம் பேசி அதை கெடுக்க பார்க்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் அவர் தன்னை மிரட்டியதாகவும் தர்ஷன் கூறினார்.

நடிகை சனம் ஷெட்டி இடமிருந்து தனது தங்கையின் திருமணத்துக்காக வாங்கிய மூன்று இலட்சம் ரூபாயை நான் திருப்பிக் கொடுத்துவிட்டேன் எனவும் மேலும் சனம் ஷெட்டி பழைய காதலனுடன் தொடர்பில் உள்ளார் எனவும் தர்ஷன் அதிரடியாக கருத்து தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் தன்னிடம் விசாரித்தால் நான் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை சமர்ப்பிப்பேன் எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகை சனம் ஷெட்டி மீது எந்த வழக்கும் போடப் போவதில்லை அவர் என்மீது வழக்கு தொடர்ந்தால் அதற்கு நான் பதிலளிப்பேன் எனவும் அவர் கூறியிருந்தார்.