நான் உன்னை காதலிக்கிறேன்! மண்டியிட்டு பெண் பிக்பாஸ் பிரபலத்திடம் உருகிய ஆண் பிக்பாஸ் பிரபலம்! மேடையில் அரங்கேறிய திடீர் திருப்பம்!

பெங்களூரு: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றவர்கள், தங்களது காதலை மேடையில் பலர் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளனர்.


கன்னட பாடகர் சாந்தன் ஷெட்டி மற்றும் நிவேதிதா கவுடா ஆகியோர் சென்ற ஆண்டில்  நடைபெற்ற பிக் பாஸ் சீசனில் பங்கேற்றனர். அதன் முதலாக, அவர்களுக்குள் காதல் உள்ளதாக, கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மைசூரு மகாராஜா காலேஜில் நடைபெற்ற யுவ தசரா நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது, திடீரென பலர் முன்னிலையில், மேடையில் வைத்து, நிவேதிதாவிடம் ஐ லவ் யூ சொன்னார் சாந்தன் ஷெட்டி.  

நிவேதிதா மட்டுமல்ல, இதைக் கேட்ட பொதுமக்களும், மாணவர்களும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பேரில் மைசூர் மாவட்ட அமைச்சராக உள்ள சோமண்ணா, பொது மேடையை தங்களது தனிப்பட்ட செயலுக்காக பயன்படுத்திக் கொண்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கும்படி, மைசூரு போலீசை கேட்டுக் கொண்டுள்ளார்.  

தசரா பண்டிகை ஒரு மத சார்ந்த நிகழ்வாகும். இது புனிதமான ஒன்றாக பலரும் கொண்டாடும் நிலையில் அதன் நிகழ்ச்சியில் ஒரு பெண்ணிடம் ஐ லவ் யூ சொல்வது ஏற்புடையதல்ல, என, சோமண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதவிர, பொதுமக்கள் தரப்பில் இருந்தும் சாந்தன் ஷெட்டி, நிவேதிதா மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. பொது இடத்தில் கண்ணிய குறைவாக நடந்துகொண்டதாகவும், குற்றம் சாட்டியுள்ளனர்.  

இப்படி சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், சாந்தன் ஷெட்டி, தனது ரசிகர்களை மகிழ்விக்கவே இப்படி செய்ய நேரிட்டதாகவும், மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் கூறி, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.