போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பிக்பாஸ் சக்தியை பொதுமக்கள் வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
முழு போதையில் காரை ஓட்டி விபத்து! தப்பி ஓடிய பிக்பாஸ் சக்தியை வளைத்து பிடித்த மக்கள்!
பிரபல இயக்குனர் பி.வாசுவன் மகன் சக்தி. இவர் சில படங்களில்
ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் ஓடாத காரணத்தினால் திரையுலகில் சோபிக்க முடியவில்லை.
ஆனால் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சக்தி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் சக்தி பிரபலம் ஆனார். அன்று முதல் பிக்பாஸ்
சக்தி என்றே இவர் அழைக்கப்பட்டு வருகிறார்.
பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற
ரெய்சா, ஓவியா உள்ளிட்டோர் எல்லாம் திரையுலகில் பிசியாக உள்ளனர். ஆனால் சக்தி மட்டும்
எதிலும் சேராமல் தன் தந்தை சேர்த்து வைத்த சொத்தில் சொகுசாக வாழ்ந்து வருகிறார். இந்த
நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதிய நேரத்தில் புல்லாக சரக்கடித்துள்ளார்.
அத்துடன் அங்கு பிரியானியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு போதையிலேயே தனது காரில் ஏறியுள்ளார்
சக்தி.
போதையில் இருந்த
காரணத்தினால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தனது காரை எடுத்துள்ளார் சக்தி. அப்போது
அவரது காருக்கு முன்னால் இருந்த கார் மீது சக்தியின் கார் மோதியுள்ளது. இதனால் அதிர்ச்சி
அடைந்த அந்த கார் ஓட்டுனர் வந்த சக்தியிடம் பார்த்து ஓட்டக்கூடாதா? என்று தகராறு செய்துள்ளார்.
அப்போது தான் யார் தெரியுமா? என்று கேட்டபடி போதையில் சக்தி காரை எடுக்க முயன்றுள்ளார்.
இதனால் அங்கு நின்று
கொண்டிருந்த சிலர் மீதும் கார் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைநத்
பொதுமக்கள் காரை சுற்றி வளைத்து நிறுத்தினர். மேலும் உள்ளே இருந்த சக்தியை வெளியே வருமாறு
கூறினர். இதனை அடுத்து போதையில் தள்ளாடியபடியே வந்த சக்தி தப்பி ஓட முயன்றார். உடனடியாக
மக்கள் அவரை பிடித்து உட்கார வைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனை அடுத்து போலீசார்
அங்கு வந்து சக்தியை அழைத்துச் சென்றனர். அண்ணா நகர் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்தில்
வைத்து சக்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது
உறுதியானது .இதனை அடுத்து சக்தியை கைது செய்த போலீசார், ஜாமினில் விடுவித்தனர். நீதிமன்றத்தில் சென்று அபராதம் செலுத்துமாறு
சக்திக்கு அறிவுறுத்தப்பட்டது.