பிக்பாஸ் வனிதாவுக்கு மீண்டும் திருமணம்! அவருக்கு 3வது கணவர் ஆகப்போவது யார் தெரியுமா? வெளியான திருமண அழைப்பிதழ்!

பிக்பாஸ் புகழ் வனிதாவுக்கு மீண்டும் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.


நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக வனிதா அறிமுகமானார். அதன்பின்னர் இவர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்னர் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு தனது கணவரை நடிகை வனிதா விவாகரத்து செய்தார். 

பின்னர் அதே ஆண்டில் ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ஜெய்ராஜன் என்பவரை நடிகை வனிதா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு நடிகை வனிதா அவரிடமிருந்தும் விவாகரத்துப் பெற்று பிரிந்தார். அதன்பின்பு நடிகை வனிதா கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை வருகிற 27-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.