பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான ரேஷ்மா தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபடியும் கல்யாணம்! பிக்பாஸ் ரேஷ்மா எனும் புஷ்பாவுக்கு 3 வது புருசன் ஆகும் இளைஞன்! யார் தெரியுமா?
நடிகை ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்கள் மற்றும் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின் ரேஷ்மா திரைப்படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் . மேலும் அவ்வப்போது பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நடிகை ரேஷ்மாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் ரேஷ்மா தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
இதனை தொடர்ந்து நடிகை ரேஷ்மா, தன் வாழ்வில் ஏற்பட்ட சோகத்தை மறப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். சென்ற இடத்தில் அவருக்கு ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் வசப்பட்டார்.
ஆகையால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி ரேஷ்மாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக நடிகை ரேஷ்மாவுக்கு அந்த திருமண வாழ்க்கையும் கைகூடவில்லை. ஆகையால் மீண்டும் அவருடைய இரண்டாவது கணவரை பிரிந்து வாழ ஆரம்பித்தார்.
இதற்குப் பின்புதான் அவர் மீண்டும் இந்தியா வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ரேஷ்மா மூன்றாவதாக நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஷாந்த் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
மேலும் அந்தப் புகைப்படத்திற்கு கேப்சனாக, வாழ்க்கை மிகச்சிறியது, உங்களை எப்போதும் சிரிக்க வைக்கும் மற்றும் அன்பு செலுத்தி வருபவர்களை உணர்ந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகை ரேஷ்மா மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் அவருக்கு திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.