பிக் பாஸ் 3! கமல் எடுத்த திடீர் முடிவு! விஜய் டிவி அதிர்ச்சி!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த ஆண்டு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.


அதற்கு பின்னர் அந்த நிகழ்ச்சியை மக்களுக்கு தொகுத்து வழங்கிய நடிகர் கமல் முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார். இதனால் பிக் பாஸ் 3 தொடங்கப்படுமா? அப்படி தொடங்கப்பட்டால் யார் அதை தொகுத்து வழங்குவார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் சில மாதங்களாகவே எழுப்பபட்டு வருகிறது.  

இந்த கேள்விகளுக்கெல்லாம் இப்பொழுது பதில் கிடைத்துவிட்டது. பிக் பாஸ் 3 வரும் ஜூன் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நம்ம உலகநாயகன் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்த செய்தி கமல் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

பிக் பாஸ் சீசன் 3 க்கான ப்ரோமோ வீடியோ நேற்று பூந்தமல்லி அருகே உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஷூட் செய்யப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. மேலும் இந்த சீசனிலும் கடந்த சீசனை போல 16 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கமல் இந்தியன் படத்தில் பிசியாகிவிடுவார் என்பதால் பிக்பாஸ் 3க்கு கமல் வரமாட்டார் என்று கூறப்பட்டது.

எனவே சூர்யா, விக்ரம், நயன்தாரா போன்றோரை பிக்பாஸ் தொகுப்பாளராக்க விஜய் டிவி முயற்சி மேற்கொண்டது. ஆனால் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கமல் திடீரென பிக்பாஸ்க்கு ஓகே சொல்லிவிட்டார். இது விஜய் டிவிக்கே இன்ப அதிர்ச்சியாக அமைந்துவிட்டது.