ஓட்டிங் முடிந்தது..! பிக்பாஸ் வெற்றியாளர் லோஸ்லியா தான்! சற்று முன் வெளியான தகவல்!

இறுதிகட்டத்தை எட்டி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.


பரபரப்பாக நடந்துவரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் , பைனலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.

பிக்பாஸ் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டைவிட்டு எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார் . இதனால் பிக்பாஸ் டைட்டிலை யார் வெல்வார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது .

பிக்பாஸ் போட்டியின் இறுதி வாரத்தில் சாண்டி , முகேன் , லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல மும்முரம் காட்டி  வருகின்றனர்.இந்நிலையில்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கான ஓட்டிங் முடிந்துவிட்டதாகவும், அதில் லாஸ்லியா தான் முதலிடத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் டைட்டில் வின்னர் லாஸ்லியா தான் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.